நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் நாய் வளர்ப்போருக்கான அறிவித்தல்!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்கள் மற்றும் கட்டாக்காலிகளாகத் திரியும் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சத்திர சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இவ் இலவச சிகிச்சை எதிர்வரும் சனிக்கிழமை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட உப அலுவலகத்தினருடனும் பொதுச் சுகாதார பரிசோதகருடனும் தொடர்பு கொள்வதன் மூலம் பெண் நாய்களுக்கான கருத்தடை சத்திர சிகிச்சையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

இச் சேவை காலை 7 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post