கிளிநொச்சியில் பாடசாலை மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி – பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

நேற்று பாடசாலைக்குச் சென்று விட்டு வந்த பின்னர் வீட்டில் வைத்து தாயின் சேலையில் அவர் தூக்கிட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரமந்தனாறு 71ஆம் வாய்க்காலைச் சேர்ந்த பத்மநாதன் அகவிழி (வயது-16) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

நான் இறந்தால் எத்தனை பேர் வருவீர்கள் என அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் கேட்டதாக அயலவர்கள் கூறுகின்றார்கள்.


Previous Post Next Post