யாழ்.நல்லை ஆதீனத்தை கைப்பற்றப் போவதாக நித்தியானந்த அறிவிப்பு!

சாமியார் நித்தியானந்தா தனது காணொளிகளில் தெரிவிக்கும் கருத்துக்களால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.

அந்தவகையில் தன்னுடைய அடுத்த இலக்கு இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம்தான் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு இலங்கையில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம்தான் என்று தனது முகநூலில் காணொளி மூலம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நல்லை ஆதீனத்துக்கும் நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இதனை நாம் சர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். சுவாமி நித்தியானந்தாவுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை.

எமது இந்து மதப் பணிகளுக்கு இடையூறு வரும் வகையிலும் எமக்கு குடைச்சல் கொடுக்கும் வகையிலும் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

Previous Post Next Post