கள்ள உறவுக்கும், நல்ல உறவுக்கும் உள்ள வித்தியாசம்! நித்தியானந்தா அருளுரை!!

கள்ள உறவு என்றால் என்ன? நல்ல உறவு என்றால் என்ன? என்பதற்கு தனது அருளுரையில் நித்தியானந்தா புட்டுப்புட்டு வைத்துள்ளார். அவர் இறுதியில் வெளியிட்ட வீடியோவில் இந்த அரிய விளக்கம் இடம்பெற்றுள்ளது.

தனது வீடியோவைப் பார்ப்பவர்கள் தூக்கம் வந்தால் டீ குடித்து விட்டு வந்து கேட்டுhறும், அரைப் போதையில் உள்ளவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டு வந்து கேட்குமாறும் தெரிவித்து சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கள், குழந்தை கடத்தல் குற்றச்சாட்டு, முன்னாள் சீடர்களுக்கு கொலை மிரட்டல் என நீண்டு செல்கிறது அவர் மீதான குற்றச்சாட்டுக்கள்.

இந் நிலையில் சாமியார் நித்தியானந்தாவை குஜராத் நீதிமன்றம், கர்நாடக நீதிமன்றம், வெளியுறவுத் துறை அமைச்சகம் என்று எத்தனை பேர் தேடினாலும் அவர் நிழல் இருக்கும் இடம் கூட இன்னும் இந்திய அரசுக்குத் தெரியவில்லை.

இது இவ்வாறிருக்க வழக்கம் போல அவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதில் கள்ள உறவுக்கு தனி விளக்கத்தையே கூறியுள்ள நித்தியானந்தா, ஒருவர் கொடுத்த கமிட்மென்டுக்கு நேர்மையாக இருந்தால் அது நல்ல உறவு எனவும், கொடுத்த கமிட்மென்டுக்கு யார் நேர்மையாக இல்லையோ அது கள்ள உறவு என்றும் அட்டகாசமான விளக்கத்தை அளித்துள்ளார்.

Previous Post Next Post