யாழ்.ராஜா திரையரங்கு உரிமையாளரும் தமிழரசுக் கட்சியின் பிரமுகருமான எஸ்.ரி.ஆர் காலமானார்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பொருளாளரும் கட்சியின் மூத்த பிரமுகருமான எஸ்.ரி.ஆர் என்று அழைக்கப்படும் சின்னதம்பி தியாகராஜா இன்று காலமானார்.

எஸ்.ரி.ஆர். பிலிம் ஸ்தாபகரான எஸ்ரிஆர், ராஜா சினிமா- யாழ்ப்பாணம், வசந்தி சினிமா- வவுனியா, அமுதா சினிமா- வவுனியா, சரஸ்வதி சினிமா- திருகோணமலை, சுகந்தி சினிமா- மட்டக்களப்பு, சாந்தி சினிமா மட்டக்களப்பு ஆகிய திரையரங்குகளின் உரிமையாளராவார்.

இன்று உயிரிழக்கும் போது அவருக்கு வயது 92.

திரையரங்குகளில் பெரிய அளவிலான ஓவியங்கள் மூலம் விளம்பரப்படுத்தும் பாணியை அறிமுகப்படுத்தியவர் என்பதுடன் சிறந்த ஓவியர்களை ஊக்குவித்தவராகவும் அவர் விளங்கியுள்ளார்.

எம்.ஜி.இராமச்சந்திரன் (எம்ஜிஆர்) ஐ யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவந்தவராகவும் அவர் விளங்கியுள்ளார்.
Previous Post Next Post