அமெரிக்காவில் இலங்கை தமிழர் சுட்டுக்கொலை - மரணத்தில் தொடரும் மர்மம்


அமெரிக்காவின் சிகாகோ நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான சுராஜ் மஹாதேவா என்ற 26 இலங்கை இளைஞன் கடந்த வாரம் இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மிகவும் நல்ல மனிதாபிமானமுள்ளவரான சுராஜின் மரணம் அவர் வாழ்ந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த வாரம் அதிகாலை 3 மணியளவில் சுராஜ் தனது நண்பரின் கடைக்கு சென்றிருந்த போது திடீரென மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். எனினும் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் நடந்து வந்தாரா வாகனத்தில் வந்தாரா என்பது இன்னமும் தெரியவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுராஜ் 2018ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என தெரியவந்துள்ளது. அவர் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் கலாச்சார பாரம்பரியத்தில் ஆர்வமாக இருந்தவராகும்.

சுராஜ் துடிப்பானவர், நம்பிக்கையானவர், திறமையானவர் என அவருடன் பழகியவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த இளைஞனின் மரணத்திற்கான காரணம் இன்னமும் மர்மமாகவே உள்ளதென பொலிஸார் தெரிவித்துளள்னர்.
Previous Post Next Post