மண்டைதீவில் தனியார் தொலைத்தொடர்பு சேவை ஆரம்பம்! (படங்கள்)

மண்டைதீவுப் பிரதேசத்தில் நீண்ட காலமாக கைத் தொலைபேசிகளுக்கான அலைவரிசை குறைவாக இருந்தமையால் அப் பகுதி மக்களின் தொலைத்தொடர்பு தேவைகள் தடைப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் அல்லது அல்லைப்பிட்டியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தின் அலைவரிசைகள் ஊடாகவே மண்டைதீவுப் பிரதேச மக்கள் கைத் தொலைபேசிப் பாவனையினை மேற்கொண்டு வந்தனர்.

இந் நிலையில் இலங்கையின் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் மண்டைதீவுப் பகுதியில் புதிதாக தொலைத்தொடர்பு கோபுரம் அமைத்து தற்போது அப் பிரதேசத்திற்கு தனது சேவையினை வழங்கியுள்ளது.

எனினும் இணைய பாவனைக்கான அலைவரிசைகள் இதுவரையும் வழங்கப்படவில்லை. இனிவரும் காலங்களிலும் அதுவும் இத் தொலைத்தொடர்பு கோபுரத்தின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post