யாழ்.சத்திரச் சந்தியில் வர்த்தகர் உள்ளிட்ட இருவர் திடீர் கைது! (படங்கள்)

யாழ்ப்பாணம் சத்திரச் சந்தியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் மற்றும் அவருடன் தொடர்புடைய இன்னுமொருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அண்மையில் அரிசியின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட பின் விலைக் கட்டுப்பாட்டு சோதனை பிரிவினரால் நாடு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் யாழ்ப்பாணம் சத்திரச்சந்திக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு பொலிஸார் மற்றும் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை தொடர்பாக அதிகாரிகள் கேட்டபோது, வர்த்தக உரிமையாளர் மிகவும் மோசமான முறையில் விலை நிர்ணய அதிகாரிகளைப் பேசியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதன்போது குறித்த வர்த்தக உரிமையாளர் மற்றும் அவருடைய சகா என இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Previous Post Next Post