யாழில் பெண்ணொருவர் செலுத்தி வந்த காருடன் மோதி இளைஞன் விபத்து! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ் விபத்து யாழ்.ஊரெழு பர்வதவர்த்தனி அம்பாள் ஆலயத்திற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

புன்னாலைக்கட்டுவானில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு உரும்பிராய் நோக்கி குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இந் நிலையில் மேற்படி பகுதியில் அதே பக்கமாகச் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தை குறித்த இளைஞன் வேகமாக முந்திச் செல்ல முற்பட்டார்.

அப்போது எதிர்த் திசையிலிருந்து பெண்ணொருவர் செலுத்தி வந்த காருடன் மோதுண்டு இளைஞன் விபத்துக்குள்ளானார்.
Previous Post Next Post