யாழில் வீட்டுக்குள் புகுந்த கும்பல்! பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசம்!!(வீடியோ)

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனிப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களை அடித்துச் சேதப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். கன்ரர் ரக வாகனத்தில் வந்திறங்கிய கும்பல் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து சேதப்படுத்தியது.
அதனால் வீட்டிலிருந்த மூவரும் அச்சமடைந்து அறை ஒன்றுக்குள் போய் பூட்டிவிட்டு இருந்துள்ளனர்.

அதன் பின்னர் வீட்டுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post