புங்குடுதீவில் சட்டவிரோதமாக மாடு வெட்டியவர் கைது! (படங்கள்)

புங்குடுதீவுப் பகுதியில் பசு மாடு ஒன்றினை வெட்டி அதன் இறைச்சியைக் கடத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலணை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அப் பகுதி கிராம அலுவலரின் முயற்சியால் இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இவர் நீண்ட காலமாக புங்குடுதீவுப் பகுதியில் இவ்வாறு சட்டத்துக்குப் புறம்பான முறையில் மாட்டினை இறைச்சிக்காக வெட்டி வருகின்றார் என பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இன்று காலை ஒரு முழு மாட்டின் இறைச்சியுடன் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறைப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு மடத்துவெளி – வல்லன் பகுதிகளுக்கிடைப்பட்ட பற்றைக்காட்டுப் பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Previous Post Next Post