பருத்தித்துறையில் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது பான்சி கடை! (படங்கள்)

பருத்தித்துறையில் பான்சி கடை ஒன்றுக்கு இனந்தெரியாதவர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல இலட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

பருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள கஜித் பான்சிஅ ன்ட் சூ மார்ட் என்ற கடைக்கு இன்று அதிகாலை 2.30 மணியளவில் விசமிகளால் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சிசிரிவி காட்சிகளை அடிப்படையாக வைத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடையின் கதவினை உடைத்து பெற்றோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. தீ வைத்து விட்டு ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

அத்துடன் சம்பவ இடத்திலிருந்து பெற்றோல் கான்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post