குடும்பப் பெண்ணைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு!

இரண்டு பிள்ளைகளின் தாயைக் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பூந்தோட்டப் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி செந்தில்செல்வன் (வயது-47) என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் குறித்த பெண், கடந்த 29.01.2020 ஆம் திகதி அன்று காலை 8.30 மணியளவில் வவுனியா நகருக்கு செல்வதாகத் தெரிவித்துச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் காலை 10.30 மணியளவில் குறித்த பெண்ணுக்கு அவரின் கணவர் தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்திய போது அவரின் தொலைபேசி செயலிழந்திருந்தது.

அதன் பின்னர் அன்றைய தினம் மாலை வரை அவரை பல இடங்களிலும் தேடியும் குறித்த பெண்ணைக் காணவில்லை.

பின்னர் 30.01.2020 ஆம் திகதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த விடயத்தினைத் தெரிவித்து கணவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. ஆறு நாட்கள் கடந்த நிலையிலும் இன்றுவரை குறித்த நபரைக் காணவில்லை.

கடைசியாக இவர் வவுனியா நகருக்குச் சென்ற சமயத்தில் பிங் கலர் சாறி அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவரைக் கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு பெண்ணின் உறவினர்கள் கேட்டுள்ளனர்.

076 156 0361 – மகன் / 076 664 7509 – மருமகன்

Previous Post Next Post