யாழில் பாரிய தாக்குதல் சம்பவம் பொலிஸாரால் முறியடிப்பு! (படங்கள்)

தாக்குதல் சம்பவம் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த மூவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் பிறிவில் இறுக்கப்பட்ட பொல்லுகளுடன் தாக்குதல் ஒன்றுக்காக மானிப்பாயிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை சங்கானைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 6 பொல்லுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் சைக்கிள் செயின் பிறிவில் இறுக்கப்பட்டிருந்தன. அவை ஆபத்தான ஆயுதங்களாகப் பார்க்கப்படுகின்றன.

அத்துடன் மூவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா சரைகளும் கைப்பற்றப்பட்டன. சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவரும் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Previous Post Next Post