இச் சம்பவம் யாழ்.தீவகம், புங்கடுதீவுப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
நாவற்குழிப் பகுதியைச் சோ்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவா் ஆவாா்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையில் பணியாற்றும் குறித்த ஊழியர் கடந்த வியாழக்கிழமை புங்குடுதீவில் உள்ள வீட்டுத் திட்ட தொகுதிக்குக் கடமை நிமிர்த்தம் சென்றுள்ளார்.
இதன் பின்னர் அவர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.