கொரோனா வைரஸ் தாக்கியவர்களைக் கொலை செய்யும் சீனா? (வீடியோ)

கொரோனா வைரஸால் சீனா பெரும் இக்கட்டான சூழ்நிலையில் தவிர்த்து வருகின்றது. நாளுக்கு நாள் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் “கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை சீனா கொலை செய்கிறது” என்று போலியான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த காணொளி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. குரோதம் நிறைந்த, மனித இயல்புக்கு முரணானது என்பதுடன் மனிதாபிமானத்திற்கு சவால் விடுக்கும் வகையில் சீனாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் விமர்சனத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் சீனத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்த தொற்று நோய்க்கான போராட்டத்தில் சீன அரசாங்கம் மிகவும் விரிவான மற்றும் கடும் தவிர்ப்பு நடவடிக்கைகளை கையாண்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாகாணத்திற்கு உதவ, அந்த மாகாணத்திற்கு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 10 நாட்களில் இரண்டு விசேட மருத்துவமனைகளை நிர்மாணித்து திறந்து வைத்துள்ளோம்.

இந்த தொற்று நோயை தடுப்பதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல நடவடிக்கைகள் சர்வதேச சுகாதார சட்டங்களுக்கு ஏதுவானதாகவும் அவசியத்திற்கும் அப்பால் சென்று நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இதன் மூலம் மக்களின் வாழ்வு மற்றும் சுகாதாரம் சம்பந்தமாக மட்டுமல்லாது உலக பொது சுகாதார பாதுகாப்பு தொடர்பாக சீன அரசு உயர் மட்டப் பொறுப்பை காட்டியுள்ளது.

போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை அவர்கள் மீண்டும் மீண்டும் எதிர்த்துள்ளனர். இலங்கையில் அனைத்து தரப்பிலும் வதந்திகளை பரப்புவதில்லை.  வதந்திகளையோ பீதிகளையோ நம்புவதில்லை. அதேபோல் இந்த தொற்று நோய்க்கு எதிராக போராட்டத்தில் சீனாவுக்கும் சர்வசே சமூகத்திற்கும் இலங்கை உதவும் என எதிர்பார்ப்பதாக” சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post