சிறுமி உட்பட மேலும் மூவருக்கு கொரோனா! பாதிப்பு 21 ஆக அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் இன்று திங்கட்கிழமை இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

13 வயதுச் சிறுமி, 34 வயதுடைய ஆண் மற்றும் 50 வயதுடையவர்கள் இவ்வாறு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் தற்போது கொழும்பு தொற்று நோயியல் (ஐடிஎச்) வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் 212 கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் அரச வைத்தியசாலைகளில் கண்காணிப்படுகின்றனர். அத்துடன் மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 10 தடுப்பு நிலையங்களில் ஆயிரத்து 800 பேர் தங்க வைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.

Previous Post Next Post