பிரான்ஸை புரட்டிப் போடும் கொரோனா! 212 பேர் பாதிப்பு!! 4 உயிரிழப்பு!!!

பிரான்ஸில் கொரோனா பாதிக்கப்பட்ட மாகாணங்கள் 12 இல் இருந்து 13 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 120 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

நேற்று மாலை வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 212 ஆக அதிகரித்துள்ளதுடன் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 21 பேர் கொரோனா தாக்கத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Morbihan நகரில் வசிக்கும் 92 வயதுடைய முதியவர் ஒருவரே நான்காவது நபராக உயிரிழந்தவர் ஆவார். Morbihan நகரில் ஏற்படும் முதலாவது உயிரிழப்பு இதுவாகும்.

அதேவேளை பிரான்ஸில் நாம் இன்னமும் இரண்டாம் கட்ட நிலையில்தான் உள்ளோம். கொரோனாவை மொத்தமாக நசுக்கும் முயற்சியில் துரிதமாகியுள்ளோம். நேற்றுடன் ஒப்பிடுகையில் 21 பேர் மேலதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post