யாழில் பரவியது கொரோனா! ஒருவர் அடையாளம் காணப்பட்டார்!!

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிக்சை பெற்று வருபவருக்கே இவ்வாறு கோரோனா தொற்று உள்ளமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

போதகரை அறை ஒன்றில் சந்தித்துப் பேசிய ஆண் ஒருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள வைத்தியசாலைக்கு இன்று மாலை மாற்றப்படவுள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post