லண்டனில் முன்னாள் போராளியின் சடலம் அநாதரவாகக் கிடக்கும் பரிதாபம்! (படங்கள்)

முன்னாள் போராளி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கடந்த டிசம்பர் மாதம் லண்டன் ஈலிங் பகுதியில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெயகாந் லட்சுமிகாந் என்ற குறித்த நபர் கடந்த டிசம்பர் மாதம் லண்டன் ஈலிங் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.

கடந்த டிசம்பர் மாதமளவில் இவர் மரணமடைந்திருந்தாலும், இவரது உடல் ஈலிங் மருத்துவமனையில் உள்ளதுடன், இது தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பதற்கு முன்னார் லண்டனிலுள்ள நகரசபையின் வேண்டுகோளுக்கு தமிழ் சமூக நடுவம் அமைப்பின் மூலம் உதவிகள் அவருக்கு வழங்கப்பட்டு வந்ததாகவும் உள ரீதியாக அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவரது குடும்ப உறவினர்கள் யாருக்கேனும் தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இதுவரையில் இவரைத் தேடி யாரும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் உரிமை கோரவில்லை எனவும் தெரியவருகின்றது.

இவரை அறிந்தவர்கள் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச் செய்தினைப் பகிா்ந்து அவரின் உறவினா்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.Previous Post Next Post