அல்லைப்பிட்டியில் அரச ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை! (படங்கள்)

அல்லைப்பிட்டிப் பகுதயில் அரசாங்க ஊழியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று காலை 09 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேலணை பிரதேச சபையில் பணியாற்றும் அல்லைப்பிட்டி 03 ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த வில்லவராஜன் குருபவராஜா என்பவரே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

அல்லைப்பிட்டி 02 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள வேறொரு வீட்டிலேயே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
Previous Post Next Post