யாழ்.நாக விகாரை மீது தாக்குதல்! பொலிஸ், இராணுவம் குவிப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியிலுள்ள நாக விகாரை மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளனர். இன்று அதிகாலை இநத சம்பவம் நடந்தது.

இந்த சம்பவத்தையடுத்து நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கது. விகாரை மீது இனம் தெரியாத மர்ம நபர்கள் கற்களால் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் விகாரையின் முகப்பில் உள்ள புத்தர் சிலையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் புத்தர் சிலைக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து ஏராளமான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் விகாரைக்கு இராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சீ.சீ.ரி.வி காணொளிகள் பெறப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Previous Post Next Post