புடவை வியாபாரிக்குக் கொரோனா! உறுதிப்படுத்தியது இந்தியா!! யாழில் தனிமைப்படுத்தப்பட்டது 5 வீடுகள்!!!

யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய புடைவை வியாபாரிக்கு கொரோனாத் தொற்று உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் இணுவிலில் நீண்டகாலம் தங்கியிருந்து அண்மையில் கப்பலில் இந்தியா சென்றிருந்த இந்திய புடைவை வியாபாரிக்கு கொரோனாத் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த சம்பவத்தினை உறுதிப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திடம் கோரியிருந்தது.

குறித்த கோரிக்கைக்கு அமைய இந்திய மத்திய அரசு தமிழக அரசைத் தொடர்பு கொண்டு குறித்த சம்பவத்தினை உறுதிப்படுத்தியிருப்பதாக தமக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து யாழ்ப்பாணத்தில் 5 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. புடவை வியாபாரி தங்கியிருந்த இணுவில் தியேட்டர் வீதியிலுள்ள 3 வீடுகள், திருநெல்வேலியிலுள்ள வீடொன்று, ஏழாலையிலுள்ள வீடொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இந்த வீடுகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவா்களின் மாதிரிகள் கொரோனாத் தொற்று தொடர்பிலான பரிசோதனைக்காக இன்று கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Previous Post Next Post