வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் புகுந்தது கொரோனா! அச்சத்தில் கைதிகள்!!

வெலிக்கடை சிறைச்சாலை கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கைதி மற்றும் ஏனையவர்கள் தொடர்பில் பீ.சி.ஆர் பரிசோதனை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் சிறைச்சாலை கைதிகள் அச்சமடைந்துள்ளதுடன் சிறைச்சாலை பரப்படைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கந்தக்காட்டில் உள்ள போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் இருந்து ஜூன் மாதம் 27 ஆம் திகதியே வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் கந்தக்காட்டிலும் அமைந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் 14 நாட்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post