யானை தாக்கிய யாழ்.பல்கலையின் சிங்களப் பெண் விரிவுரையாளர் உயிரிழப்பு!

இரண்டாம் இணைப்பு 
யாழ்ப்பாணம் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள வளாகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீடத்தில் விரிவுரையாளரான பெண்ணொருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 8.15 மணியளவில் அவர் யானை தாக்குதலிற்கு இலக்கானார். டில்ருக்சி(35) என்பவரே உயிரிழந்தார்.

கடுமையான காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.


முதலாம் இணைப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீடத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர், காட்டு விலங்கு தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.

அவர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  இந்தச் சம்பவம் இன்றிரவு இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


அவரை யானை அல்லது கரடி தாக்கியிருக்கவேண்டும் என்று தெரிவிக்கும் பொலிஸார், விசாரணை இடம்பெறுவதாக குறிப்பிட்டனர்.

தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளரான தென்னிலங்கையைச் சேர்ந்த அவர், விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டு விடுதிக்கு திரும்பிய வேளை காட்டு விலங்கின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.


Previous Post Next Post