“நான் சாகப் போகிறேன், இதுதான் எனது கடைசி வீடியோ” தற்கொலைக்கு முயற்சித்த நடிகை!!! (வீடியோ)

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. அதைத்தொடர்ந்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மீசைய முறுக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

இந்தநிலையில் இன்றையதினம் அவர் சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதையடுத்து அவர் சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக விடியோ வெளியிட்ட விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post