யாழ்.மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றிலிருந்து கை குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றய தினம் காலை மண்டைதீவில் உள்ள வழிபாட்டுதலம் ஒன்றின் பின்னால் உள்ள வெற்று காணியில் விறகு எடுக்கச் சென்றவர்கள் அங்கே கை குண்டு உள்ளதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குண்டை மீட்டு செயலிழக்க நடவடிக்கை எடுத்தள்ளனர்.
