யாழில் 28 வயதுப் பெண் உட்பட இருவர் கைது!

யாழ்.புத்தூர் நவக்கிரி பகுதியில் 28 வயதான பெண் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது கஞ்சாவினை விற்பனை செய்த 28 வயதுடைய பெண்ணொருவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து 157 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post