நீ யாருடி.. நீ பத்தினியா? லைவில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அசிங்கமாகப் பேசிய வனிதா! (வீடியோ)

பிரபல நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருணனை லைவில் தரக்குறைவாக பேசி திட்டி தீர்த்திருக்கிறார் வனிதா. நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்தார் நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பின்னர் வனிதாவின் பேச்சை கேட்க முடியாமல் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதாவை நேரலையில் பேச வைத்தனர். இதில் பேசிய வனிதா, லக்ஷ்மி ராமகிருஷ்ணனை கடுமையான வார்த்தைகளால் அசிங்கமாக பேசினார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் வனிதா.


அதில் வனிதா பேசியிருப்பதாவது,

எனக்கு டிகினிட்டி இல்ல உனக்கு இருந்தால் நீ இதுபோன்ற ஓவர் ஆக்டிங்கெல்லாம் செய்திருக்க கூடாது. நீங்க யாரு? அந்த பொம்பளைக்கு ஷ்யூரிட்டி கொடுக்கறதுக்கு நீங்க யாரு? நீ என்ன மெட்ராஸ் ஹைகோர்ட் ஜட்ஜா? நீ என்ன லாயரா? நீங்க எதுக்கு இந்த பிரச்சனையில தலையிடுறீங்க..

அப்புறம் எதுக்கு கோர்ட் ஜட்ஜ், லாயர் இருக்காங்க. நீ யாரு? டிராமா பண்ணிக்கிட்டு இருக்கியா? தைரியம் இருந்த நான் கேட்க்குற கேள்விக்கு பதில சொல்லு என்றார்.

பின்னர் ஒரு கட்டத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை போடி வாடி என்றும் ஏக வசனத்தில் பேசினார் வனிதா. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அத்தனை பேரு வாழ்க்கையை கெடுத்தீங்க.. ஒன்னும் தெரியாத மக்கள்கிட்ட போய் பேச தெரியுது. என்கிட்ட பேச தைரியம் இல்லையா உனக்கு? இங்க எதுக்கு வந்ததுஇ சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூட்டம்னு வந்தீயா இங்க. உனக்கு என்ன ... வேலை இங்கே. இது தெரு சண்டைதான், குழாயடி சண்டைதான்.


நீ சினிமா டைரக்டர்னா, போய் சினிமா டைரக்ஷன் பண்ணுடி.. நீ போர்வை போர்த்தாத.. நீ ரொம்ப பத்தினியா.. ஒரு புருஷன் இருந்தா.. நீ ஒழுங்கா.. நீ யாருடி.. உன்னை கிழிச்சு தொங்க விடதாண்டி நான் வந்துருக்கேன். என் புருஷன ஷிட்டுன்னு சொல்ற.. உன் புருஷன் ஷிட்.. உன் கூட குடும்பம் நடத்துறானே அந்த கேடுக்கெட்டவன், வெட்கங்கெட்ட ஜென்மம் அவன்தான் ஷிட்..

குப்பை.. உன்னை அப்படி தாண்டி பேசுவேன். முடிஞ்சா என்மேல ஆக்ஷன எடு.. பேசுலாம் வாடி.. எதுக்கு வந்தடி.. நீ யாருடி.. இதை ரெக்கார்டு பண்ணி போட்டு உன்னை கிழிச்சு தொங்க விட்றேன்டி.

இனிமே எங்கேயாவது இந்த வேலை வச்சுப்ப? இப்படி அநாகரிகமாக பேசினார் வனிதா. மேலும் பல சொல்ல முடியாத வார்த்ததைகளையும் பேசி லக்ஷ்மி ராமகிருஷ்ணனை கிழித்து தொங்கவிட்டார் வனிதா.
Previous Post Next Post