கொழும்பில் இளம் தமிழ் மனைவியை கொலை செய்த கணவன்! (படங்கள்)

விஜேராம ரப்பர் தோட்டத்தின் முதல் பாதையிலுள்ள அறையொன்றில் பதுங்கியிருந்த கணனி பொறியியலாளர் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத் தொழிலாளி ஒருவரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்பொட கடுபிட்டிய பபேகம பிரதேசத்தை சேர்ந்த சதாசிவம் நிரஞ்சலா வயது 25 என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சடலம் உடபுஸ்ஸல்லாவை, சோகமவத்தை, உள்ள முட்புதர் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கயிறு போன்றவற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விசாரணைக்காக கைது செய்யப்பட்ட நபர் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் களுபோவில பகுதியில் உள்ள அறையில் தங்கியிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கணவனும் மனைவியும் கொழும்பில் இருந்து புஸ்ஸல்லாவைக்கு வந்திருந்த நிலையில் சந்தேகத்திற்குரிய கணனி பொறியியலாளர் பெண்ணிடம் விவாகரத்து கோரியதால் புஸ்ஸல்லாவ நகரில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் சந்தேகநபர் கொழும்புக்கு வந்துள்ளதாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
Previous Post Next Post