மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தில் இளம்பெண் ஒருவர் உயி*ரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 16ஆம் திகதி மகிழடித்தீவு கலாச்சார மண்டபத்தில் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், திருமணமாகி சில நாட்களிலேயே குறித்த இளம்பெண் தனது இல்லத்தில் உயி*ரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த து*யரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதி*ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் முடிவிலேயே சம்பவத்திற்கான முழுமையான காரணம் தொடர்பான தகவல்கள் தெரியவரும்.