யாழில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு! (படங்கள்)

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post