
மது போதையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்ற அவர், தனது குழந்தையை வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் குழந்தையின் தாயார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு பருத்திதுறை ஆதார மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டது.
பரிசோதனையின் போது, குழந்தை வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கஞ்சா மற்றும் கசிப்பு போன்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் பணத்திற்காக தனது மனைவியை விபசாரத்தில் ஈடுபடுமாறும் கட்டாயப்படுத்தி வந்துள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.