கிளிநொச்சியில் இளைஞன் மீது கத்திக் குத்துத் தாக்குதல்!

கிளிநொச்சி - பளை வண்ணாங்கேணி பகுதியல் நேற்று மாலை கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பளை வண்ணாங்கேணி கிராமத்தில் நேற்றைய தினம் மாலை வேளை அதே கிராமத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தவேளை பின்னால் வந்த குடும்பஸ்தர் ஒருவர் குறித்த இளைஞனை வழி மறித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் மீது தாக்குதல் நடாத்தியவர் ஒரு இஸ்லாமியர் எனவும் இவர் தற்காலிகமாகவே பளை வண்ணாங்கேணி பிரதேசத்தில் வசித்து வருவாகவும் பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு கொண்டிருப்பவர் எனவும் கிராம மக்களிடையே ஆத்திரத்தையும் ஏறபடுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post