191 பேருடன் சென்ற விமான விபத்து நடந்த இடத்தில் தனியாக தவித்த குழந்தை!

இந்தியாவில் 191 பேருடன் சென்ற விமான விபத்தில் தனியாக தவித்த குழந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டு உதவி கேட்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் Air India Express நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர சென்றது.

அதன் படி, 174 பயணிகள், 10 கைக்குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் என மமொத்தம் 191 பேருடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கூடுக்கு புறப்பட்டு வந்துள்ளது.

விமானம் தரையிரங்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகியதால், விமானம் விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்து நொறுங்கியது.

இதன் காரணமாக விமானி உட்பட 2 பேர் பலியாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 30 முதல் 40 பயணிகள் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.'

இந்நிலையில் தற்போது இந்த விமான விபத்து நடந்த பகுதியில் குழந்தை ஒன்று தனியாக நின்றுள்ளது. அந்த குழந்தை அங்கிருக்கும் Kondotty மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் இவரைப் பற்றி யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post