முன்னாள் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் எம்.பியாகிறார்!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 14 தேசியப் பட்டியல் ஆசனங்கள் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டோரின் விவரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சாஹர காரியவசம், அஜித் நிவாட் ஹப்ரால், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, திருமதி மஞ்சுள திசாநாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சரித ஹேரத், ஜீவிந்து குமாரதுங்க, மொகமெட் முசாமில், பேராசிரியர் திஸ்ஸவிதாரன,

எந்திரி யாதமினி குணவர்த்தன, கலாநிதி சுரேன் ராகவன், மருத்துவர் சீதா அரம்பேபொல, திரான் அலிஸ், ஜயந்த கீதகொத, மார்ஜன் பலீல் ஆகியோர் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post