கரித்தாஸ்-கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழில் கொரோனா விழிப்புணர்வு பேரணி! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கரித்தாஸ் கியூடெக் அமைப்பின் யாழ். மாவட்ட இளைஞர் அணியினரால் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் அண்மைக்காலத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காணப்படுகிற நிலையில் பொதுமக்கள் மத்தியில்கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மூவினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து இந்த விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாண நகரின் பிரதான நகரங்களில் குறித்த விழிப்புணர்வு செயற்பாடு இடம்பெற்றதோடு யாழ்ப்பாண நகரப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் பேரணியாக விழிப்புணர்வு பதாகைகளை தாங்கியவாறு விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

விழிப்புணர்வு செயற்பாட்டில் யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Previous Post Next Post