மாணவியிடம் கொள்ளை! சகோதரனும், சகோதரியும் கைது!

பாடசாலை மாணவியின் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் இளைஞனும், அந்த சங்கிலியை வைத்திருந்த குற்றச்சாட்டில் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இருவரும் உடன்பிறந்தவர்களாவர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின், முள்ளியவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவிகளிடம் சங்கிலி அறுத்த விவகாரத்திலேயே இளைஞன் ஒருவர் கைதானார்.


அவர் அந்த பகுதியில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, அவரது சகோதரியிடமிருந்து கொள்ளையிடப்பட்ட சங்கிலி மீட்கப்பட்டது.

இளைஞனையும், யுவதியையும் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post