பிரான்ஸில் கட்டாயமாக்கப்பட்ட சட்டம்! சற்றுமுன் பிரதமர் அறிவிப்பு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பரிஸ் முழுவதும் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என சற்று முன்னர் பிரதமர் அறிவித்துள்ளார்.

உள்ளிருப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர் பரிசில் குறிப்பிட்ட சில வீதிகளிலும் பகுதிகளிலும் பயணிக்க முகக்கவசம் கட்டாயமாக அணியவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சமீப நாட்களாக கொரோனா தொற்று பரிஸ் உட்பட இல் து பிரான்ஸ் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இதனால் இன்று அமைச்சர்களிடையேயான சந்திப்பை தொடர்ந்து பிரதமர் Jean Castex இதனை அறிவித்துள்ளார்.

பரிசின் அனைத்து பகுதிகளிலும் முக்ககவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என தெரிவித்த பிரதமர், பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவிடம் ஆலோசித்ததன் பின்னரே இந்த முடிவை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Previous Post Next Post