நாளை பொதுத் தேர்தல்! வேலணை பிரதேச சபையால் தொற்று நீக்கல்!! (படங்கள்)

நாளைய தினம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பாடசாலைகளும் நேற்றைய தினம் பிரதேச சபைகளால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுக் காரணமாக குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் முடிவடைந்து, பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரும் இத் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.


அந்தவகையில் வேலணை பிரதேச சபையினால் அதன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் அனைத்திலும் தொற்று நீக்கும் செயற்பாடுகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை நாளை மறுதினம் தேர்தல் முடிவடைந்த பின்னர் குறித்த பாடசாலைகளுக்கு வேலணை பிரதேச சபையால் தொற்று நீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post