யாழ்.போதனா வைத்தியசாலையின் நான்காம் மாடியிலிருந்து வீழ்ந்த பெண் ஊழியர் மரணம்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்ற நான்கு பிள்ளைகளின் தாயாராகிய 40 வயதுடைய பெண் ஊழியர் ஒருவர் நான்காம் மாடியிலிருந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் கணவன் உடல் நிலை பாதிப்புக்கு உள்ளானவர் என்று தெரியவருகிறது.

பெண் நான்கு மாடியிலிருந்து வீழ்ந்தமை தற்செயலாக நிகழ்ந்ததா? தற்கொலையா? அல்லது வேறு காரணமா? என்பது தொடர்பிலான விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரியவருகிறது.

பணிச் சுமை தொடர்பில் உயர் மட்டத்தினரிடம் அடிக்கடி முறையிட்டுவந்தவர் என்றும் தெரியவருகின்றது.

Previous Post Next Post