யாழில் கட்டடத் தொழிலாளி இடிபாட்டுக்குள் சிக்கி பரிதாபச் சாவு! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வீடு திருத்தவேளையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் அதற்குள் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

சுன்னாகம், அம்பனைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. நவாலி கலையரசி லேனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் (வயது-42) என்பவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுனனாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Previous Post Next Post