இல் து பிரான்ஸ் கொரோனா ஆபத்து வலையமாக அறிவிப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இல் து பிரான்ஸ் மாகாணத்தை கொரோனா ஆபத்து வலையமாக ஜெர்மன் நாடு அறிவித்துள்ளது.

தவிர இல் து பிரான்சுக்குள் இருந்து ஜெர்மனிக்கு பயணிப்பவர்களை அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவிர Provence-Alpes-Côte-d'Azur மாகாணத்தையும் அதிக கொரோனா தொற்றுள்ள ஆபத்து வலையமாகவும் அறிவித்துள்ளது.


ஜெர்மனியில் அவர்களுடைய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் 'அவசியமில்லாத பயணங்களை (இந்த மாகாணங்களுக்கு) தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர, ஜெர்மனியில் இருந்து இல் து பிரான்ஸ் அல்லது, Provence-Alpes-Côte-d'Azur மாகாணத்துக்கு வருபவர்கள், மீண்டும் ஜெர்மனிக்கு செல்லும் போது தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post