பிரான்ஸில் இன்று மீண்டும் தலைதூக்கியது மஞ்சள் மேலங்கிப் போராட்டம்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நீண்ட நாட்களின் பின்னர் இன்று மீண்டும் பரிசில் மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்றது.

இன்று சனிக்கிழமை ஓகஸ்ட் 15 ஆம் திகதி மதியம் 2:30 மணி அளவில் இந்த போராட்டம் இடம்பெற்றது. Bercy இல் குவிந்த ஒரு சிலநூறு போராளிகள், தங்கள் ஆர்ப்பாட்டத்தை 'பொருளாதார அமைச்சகம்' (Nation வழியாக Bastill வரை) வரை நீட்டித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளதாக கூறப்பட்ட போதும், இன்று காலையில் இருந்து புதிய சட்டம் பரிசில் நடைமுறையில் இருப்பதால் பாரிய காவல்துறை படை ஒன்று கண்காணிப்பில் ஈடுபட்டது.

இன்று காலை 8 மணியில் இருந்து மறு அறிவிப்பு வரை பரிசில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓரிடத்தில் கூட முடியாது. (போதிய சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத இடங்களில்)

இதனால் மஞ்சள் மேலங்கி போராளிகள் பத்து பத்து பேராக மாத்திரமே அனுமதிக்கப்பட்டன.
Previous Post Next Post