நிறைவெறியில் வீடு புகுந்து வாள்வெட்டு! ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் படுகாயம்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி- தருமபுரம் பகுதியில் மதுபோதையில் வந்தவர்கள் வீடு புகுந்து நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பழனியாண்டி கோவிந்தகுமார் வயது-26, பழனியாண்டி சதீஸ்குமார் வயது-27 ஆகிய இருவரே காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் தர்மபுரம் பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் இருவரை கைது செய்துள்ளதுடன், சம்பவ இடத்திலிருந்து தொலைபேசி ஒன்றையும் மீட்டிருக்கின்றனர்.
Previous Post Next Post