யாழில் தனியார் நிறுவனத்துக்கு எதிராக ஏ-9 வீதியை மறித்துப் போராட்டம்! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் பெருமளவு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதற்கு எதிராக நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள், ஏ.9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 20 நிமிடம் ஏ9 வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.

செம்மணி பகுதியில் பெருமளவு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தனியார் நிறுவனமொன்றே இதனுடன் தொடர்புபட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

இந்த தகவலையடுத்து, நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

நல்லுர் பிரதேசசபை உறுப்பினர்கள் பார்வையிடுவதை அறிந்ததும், மருத்துவ கழிவை கொட்டிய தனியார் நிறுவனத்தின் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் அங்கு வந்து, கழிவுகளை அகற்ற முயன்றனர்.எனினும், அதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்த செயலை கண்டித்து, நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்கள் வீதி மறிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார், போராட்டக்காரர்களுடன் பேசினர். பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தும் இடம்பெறுவதாக குறிப்பிட்டதையடுத்து, போராட்டக்காரர்கள் வீதி மறியலை கைவிட்டு, தற்போது வீதியோரமாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.Previous Post Next Post