சுமந்திரனின் விருந்தில் மாவை பங்கேற்பு! நமக்கு சோறுதான் முக்கியம் மக்களே..! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தேர்தலில் ஒத்துழைத்த அமைப்புகளின் பிரதிநிதிகள், உறுப்பினர்களுக்கு நன்றி பாராட்டும் நிகழ்வு சிறுப்பிட்டியில் இடம்பெற்று வருகிறது.

சிறுப்பிட்டி சி. வை. தாமோதரம்பிள்ளையின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நிகழ்வுகளை இன்று மாலை ஆரம்பித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் தனது வெற்றிக்கு ஒத்துழைத்தவர்களுக்கு அவரால் இந்த இரவு விருந்துபசார நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நடத்தும் நன்றி பாராட்டு நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ சேனாதிராசாவும் பங்கேற்றுள்ளார்.

பொதுத் தேர்தல் மற்றும் அதன்பின்னரான நடவடிக்கைகளால் எம்.ஏ.சுமந்திரனுடன் மறைமுக முரண்பாடு தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு சீ.வி.கே.சிவஞானம், ஈ.சரவணபவன் ஆகியோரும் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இரவு விருந்துபசார நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பங்கேற்றுள்ளார்.Previous Post Next Post