இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்! 16 நாட்களில் 21 பேர் பலி!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையில் கொரோனா தொற்று பரவலின் 3வது அலை காலத்தில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 10 ஆயிரம் பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

நேற்றைய தினம் (நவ-07) கொரோனா தொற்று காரணமாக 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து 3வது அலை தொற்று பரவல் ஏற்பட்ட பின்னர் குறிப்பாக 16 நாட்களில் மட்டும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆக உயர்வடைந்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆக அதிகிரத்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் மேலும் 449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் ஏற்கனவே மினுவாங்கொட கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்புபட்ட188 பேரும், பேலியகொட கொத்திணியுடன் தொடர்புட்ட கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த 257 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இது தவிர ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பிய ஒருவர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடு தி|ரும்பிய கடலோடிகள் 03 பேரும் உள்ளடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நேற்றைய தினம் தொற்று உறுதியான 445 பேருடன் சேர்த்து மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணியில் தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 941 ஆக அதிகரித்து 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்றைய தினம் 537 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்pணக்கை 7 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு வைத்தியசலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 662 ஆக உள்ளதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

13,419 தொற்றுகளுடன் உலகளாவிய கொரோனா தொற்று பதிவான நாடுகள் வரிசையில் ஒரு இடம் முன்னேறி 105 வது இடத்தில் இலங்கை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post