கரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு பெண்களும் சிறுவன் ஒருவனுக்குமே கோவிட் -19 நோய் ஏற்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் கொழும்பு, பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்தவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருபவரின் உறவினர்கள் மூவருமே கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் ஒரு வாரத்துக்கு மேலாக சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் நேற்றைய தினம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் கோவிட் – 19 தொற்று நோய் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் செய்யப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post