யாழில் முடங்கியது ஒரு பகுதி! 28 கிராமங்களில் கொரோனாத் தொற்று சாத்தியம்!! (வீடியோ)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் அறிவித்துள்ளார்.

https://np.gov.lk/maps-of-province-districts-and-ds-divisions/

உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ – சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடுவில் பிரதேச செயலக பிரிவில் 30 கிராம அலுவலகர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.

வெறிச்சோடிக்கிடக்கும் மருதனார்மடம் பகுதி…
மருதனார்மடம் கொரோனாத் தொற்று உறுதியானவரின் வீட்டில் குழந்தைகள் உட்பட 14 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்போது…
Previous Post Next Post